நீண்ட தலைமுடியுடன் இருக்கும் சூர்யாவின் புதிய தோற்றம் - வாடிவாசல் படத்திற்கான தோற்றமா?
நடிகர் சூர்யாவின் புதிய தோற்றம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. நீண்ட தலைமுடியுடன் சூர்யா இருக்கும் இந்த புகைப்படம், வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் வாடிவாசல் திரைப்படத்தில் சூர்யாவின் தோற்றம் என ரசிகர்கள் இதனை பகிர்ந்து வருகின்றனர்.
வாழ்த்து கூறியவர்களுக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான்
பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தனது 55ஆவது பிறந்தநாளை நேற்று கொண்டாடினர். ஷாருக்கானுக்கு ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் வாழ்த்து கூறினர். இந்நிலையில், தனக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியவர்களுக்கு ஷாருக்கான் நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.