சினிமா

தர்பார் படத்துக்கு தடை கோரிய வழக்கு : தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு

தர்பார் படத்துக்கு தடை கோரிய வழக்கின் தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

தர்பார் படத்துக்கு தடை கோரிய வழக்கின் தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. லைக்கா நிறுவனம் 23 கோடி ரூபாய் கடன் வழங்க வேண்டியுள்ளதால், படத்துக்கு தடை விதிக்க கோரி மலேஷிய நிறுவனமான டிஎம்ஒய் கிரியேசன்ஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள தர்பார் படம் ஜனவரி 9 ஆம் தேதி வெளிவர உள்ள நிலையில், லைக்கா நிறுவனம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தங்கள் நிறுவனம் பெற்ற கடனுக்கு காலா படத்தின் சிங்கப்பூர் வெளியிட்டு உரிமை அளித்ததாக தெரிவித்துள்ளது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கை தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளார்.

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு