சினிமா

களவாணி 2 படத்தை வெளியிட இடைக்கால தடை

விமல், ஓவியா நடிப்பில் சற்குணம் இயக்கத்தில் உருவாகியுள்ள களவாணி 2 திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது

தந்தி டிவி
விமல், ஓவியா நடிப்பில் சற்குணம் இயக்கத்தில் உருவாகியுள்ள களவாணி 2 திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.இத்திரைப்படத்தை தமிழகம் மற்றும் புதுவையில் வெளியிடுவதற்கான உரிமையை பெற்ற ஸ்ரீதனலட்சுமி பிக்சர்ஸ், அதனை மெரினா பிக்சர்ஸுக்கு வழங்க மூன்று கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் போடப்பட்டது.இந்நிலையில் ஒப்பந்தத்தை மீறி படத்தின் உரிமையை கியூப் நிறுவனத்திற்கு மெரினா பிக்சர்ஸ் நிறுவனம் வழங்கியதாக கூறப்படுகிறது.இதனால் தங்களுக்கு நஷ்டம் ஏற்படும் என்பதால், களவாணி 2 படத்தை வெளியிட தடை விதிக்க கோரி ஸ்ரீதனலட்சுமி பிக்சர்ஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், ஜூன் பத்தாம் தேதி வரை களவாணி 2 திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்