சினிமா

சமந்தாவின் நடிப்பால் சர்ச்சையா...? தி பேமிலி மேன்-2 சர்ச்சையில் நடப்பது என்ன?

தி பேமிலி மேன்-2 இணைய தொடரை தடை செய்ய வேண்டும் என மத்திய அரசை தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ள நிலையில், இவ்விவகாரத்தில் நடப்பது என்ன என்பதை தற்போது பார்க்கலாம்...

தந்தி டிவி

தி ஃபேமிலி மேன் 2 இணைய தொடருக்கு தடைவிதிக்குமாறு, மத்திய ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரை, தமிழக தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ் வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், பெருமைமிகு தமிழ்ப் பண்பாட்டை இழிவுபடுத்தும் கருத்துகளைக் கொண்ட தொடரை எந்த வகையிலும் ஒளிபரப்புக்கு ஏற்ற மதிப்புகளைக் கொண்டதாக கருதமுடியாது எனக் கூறியுள்ளார். மாநிலத்தில் நல்லிணக்கத்தை பேண முடியாது என்றும் கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்கள் மீது மிகுந்த அன்பும், மரியாதையும் கொண்டிருப்பதாக, தி ஃபேமிலி மேன் 2 இயக்குனர் குழு விளக்கம் அளித்துள்ளது. முதல் சீசனைப் போலவே சீரான மற்றும் சுறுசுறுப்பான கதைக்களத்தை கொண்டு வர பல வருட உழைப்பை செலுத்தி உள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர்கள், தங்களது முன்னணி நடிகர்கள் மற்றும் குழுவின் முக்கிய உறுப்பினர்கள் தமிழர்கள் எனவும் தெரிவித்துள்ளனர். நிகழ்ச்சியை அனைவரும் காத்திருந்து பார்க்குமாறு கேட்டுக் கொண்டுள்ள இயக்குனர்கள், நிச்சயம் பாராட்டும்படியாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.

TVK Vijay | TN Election | "அப்போதே விஜய் சொல்லிவிட்டார்" - தவெக முஸ்தபா கொடுத்த விளக்கம்

TVK | Senthilbalaji | டெல்லி CBI ஆபீஸில் செந்தில்பாலாஜி

Chennai TVK | உறுதியான விஜய், ஆதவ், என்.ஆனந்த் தொகுதிகள்? - சென்னையில் தவெக ஸ்டார் வேட்பாளர்கள்

Chennai TVK | உறுதியான விஜய், ஆதவ், என்.ஆனந்த் தொகுதிகள்? - சென்னையில் தவெக ஸ்டார் வேட்பாளர்கள்

``234 தொகுதியிலும் இதுதான் களநிலவரம்..’’ - சம்பவம் செய்யப்போகும் விஜய்?