சினிமா

'மிஸ் தமிழ்நாடு' போட்டி நடத்தி மோசடி : நடிகை மீரா மிதுன் மீது புகார்

'மிஸ் தமிழ்நாடு' அழகிப் போட்டி நடத்தி மோசடி செய்ததாக நடிகை மீரா மிதுன் மீது சென்னை காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது

தந்தி டிவி

கடந்த 30 ஆம் தேதி நடிகையும் மாடல் அழகியுமான மீரா மிதுன், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில் 'மிஸ் சவுத் இந்தியா' நிறுவன நிர்வாக இயக்குனர் அஜித் ரவி மற்றும் ஜோ மைக்கில் பிரவீன் ஆகியோர் கொலை மிரட்டல் விடுப்பதாக கூறியிருந்தார். அன்றைய தினமே தென்னிந்திய அழகிப் பட்டம் மீரா மிதுனிடமிருந்து பறிக்கப்பட்டது.

இந்நிலையில், 'மிஸ் தமிழ்நாடு' அழகி போட்டி நடத்த அஜித் மற்றும் பிரவீன் ஆகியோருக்கே உரிமம் வழங்கப்பட்டு இருப்பதாகவும், அதனை தவறாக சிலர் பயன்படுத்துவதாகவும் மிஸ் சவுத் இந்தியா நிர்வாகம் விளக்கமளித்தது. இதன் தொடர்ச்சியாக, 'மிஸ் தமிழ்நாடு' போட்டி நடத்துவதாக கூறி, மாடல் அழகிகள் மற்றும் ஆடை வடிவமைப்பாளர்களிடம் நடிகை மீரா மிதுன் பண மோசடி செய்து விட்டதாக சென்னையில் தேனாம்பேட்டை மற்றும் எண்ணூர் காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்