சினிமா

"ஏமாற்றுகிறார்.." நடிகர் யோகிபாபு - பரபரப்பு புகார் - உண்மை இதுதான்..!

தந்தி டிவி

பணத்தை வாங்கி கொண்டு படத்தில் நடிக்காமல் ஏமாற்றுவதாக நடிகர் யோகி பாபு மீது, காவல் நிலையத்தில் தயாரிப்பாளர் புகார் அளித்துள்ளார்.

சென்னை விருகம்பாக்கத்தில், ROOBY பிலிம்ஸ் என்ற பெயரில் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருபவர் ஹாசிர். இவர் ஜாக் டேனியல் என்ற படத்தை தயாரிக்க முடிவு செய்துள்ளார். இதில் நடிப்பதற்காக யோகி பாபுவிடம் 65 லட்சம் ரூபாய் பேசி, முன்பணமாக 20 லட்சம் ரூபாய்க்கான காசோலை கொடுத்த‌தாக கூறப்படுகிறது. இந்நிலையில் சூட்டிங் தொடங்கியதும் நடிகர் யோகி பாபுவை நடிப்பதற்காக தயாரிப்பு நிறுவனம் அழைத்ததாகவும், ஆனால் யோகி பாபு வராமல் ஏமாற்றி வந்த‌தாகவும் கூறப்படுகிறது. பணத்தை திருப்பித் தரும்படி தயாரிப்பாளர் ஹாசிர் கேட்ட போது, தராமல் இழுத்தடித்த‌தாக தெரிகிறது. இதையடுத்து, விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் யோகிபாபு மீது ஹாசிர் புகார் அளித்துள்ளார். ஆனால், படத்தில் நடத்தி கொடுத்து விட்டதாகவும், ஹாசிர் அளித்த புகார் முற்றிலும் தவறானது என்றும், யோகி பாபு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்