ஒரு கை தரையில் - அந்தரத்தில் உடல் சின்னத்தரை நடிகையின் படம்
சின்னத்திரை நடிகை கவிதா கௌசிக்கின் புதிய புகைப்படம் சமூக வலை தளங்களில் பரவி வருகிறது. யோகா மீது ஆர்வம் கொண்ட அவர், யோகா பயிற்சி செய்து அந்த படங்களை சமூக வலை தளங்களில் பதிவிட்டுள்ளார். ஒரு கையை மட்டும் தரையில் ஊன்றி கொண்டு உடல் முழுவதும் அந்தரத்தில் இருப்பது போன்று கவிதா வெளியிட்டுள்ள யோகா புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.
பரதநாட்டியம் ஆடிய நடிகை மோனிஷா...
சின்னத்திரை நடிகை மோனிஷா தனது வீட்டில் பரதநாட்டியம் ஆடி அதனை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். காலை நேரத்தில் நடன பயிற்சி மேற்கொண்டதாக அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விஜய் சேதுபதியின் 'துக்ளக் தர்பார்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்
விஜய் சேதுபதி நடிக்கும் துக்ளக் தர்பார் என்ற படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது. இயக்குனர் டெல்லி பிரசாத் தீனதயாள் இயக்கத்தில், விஜய்சேதுபதி, அதிதி, மஞ்சிமா மோகன் மற்றும் பார்த்திபன் ஆகியோர் நடிப்பில் இந்தப் படம் உருவாகி வருகிறது.
'பிரபாஸ் 20' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை வெளியாகிறது
தெலுங்கு நடிகர் பிரபாஸின் 20-வது படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்து வரும் இந்த படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் நாளை காலை 10 மணிக்கு வெளியாகிறது.