சினிமா

சல்மான் கானுக்கு எதிரான புகார் : நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பத்திரிகையாளர்

பாலிவுடன் நடிகர் சல்மான் கானுக்கு எதிராக பத்திரிகையாளர் ஒருவர் குற்றவியல் புகார் தெரிவித்து, அந்தேரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

தந்தி டிவி

பாலிவுடன் நடிகர் சல்மான் கானுக்கு எதிராக பத்திரிகையாளர் ஒருவர் குற்றவியல் புகார் தெரிவித்து, அந்தேரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். தனியார் செய்தி நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் அசோக் எஸ்.பாண்டே, தான் கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி காரில் வந்த போது, அந்த வழியாக வந்த சல்மான் கானை படம் பிடிக்க முயன்றதாகவும், சல்மான் மறுத்ததும் அவரது பாதுகாவலர்கள் தன்னை தாக்கியதாகவும் தெரிவித்தார். மேலும், சல்மான் கானும் தன்னை தாக்கி, தனது செல்போனை உடைக்க முயன்றதாக அசோக் தெரிவித்தார். இந்நிலையில் இது குறித்து போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், வழக்கு தொடர்ந்ததாக அவர் கூறினார். இந்நிலையில் வழக்கை ஜூலை 12ஆம் தேதி விசாரிப்பதாக அந்தேரி நீதிமன்றம் அறிவித்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்