சினிமா

ரசிகர்கள் மீது கை வைக்க வேண்டாம் - விஜய் வேண்டுகோள்

பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய், தனது ரசிகர்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தந்தி டிவி

அரசியலில் புகுந்து விளையாடுங்கள், ஆனால் விளையாட்டில அரசியல் செய்யாதீர்கள் என கோரிக்கை விடுத்த நடிகர் விஜய்.

யாரை எங்கு உட்கார வைக்க வேண்டுமோ அங்கு உட்கார வைத்தால் எல்லாம் சரி ஆகி விடும் என்றார்.

பேனரால் உயிரிழந்த சுபஸ்ரீ குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த அவர், யார் மீது பழி போட வேண்டுமோ அவரை விட்டுவிட்டு, லாரி ஓட்டுநர் மீதும், பேனர் அடித்தவர் மீதும் பழி போடுகிறார்கள் என்று குற்றம் சாட்டினார்.

எனது பேனர் கட் அவுட்களை உடையுங்கள், கிழியுங்கள், பல சிரமங்களுக்கு மத்தியில் வைத்த பேனர்களை கிழிக்கும் போது, ரசிகர்களுக்கு கோபம் வருவது நியாயம் தான், அதற்காக அவர்கள் மீது கை வைக்காதீர்கள் என்றும் நடிகர் விஜய் உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.

கருணாநிதியை இழிவு படுத்திய அமைச்சர் ஒருவரை பிரசாரத்திற்கு மத்தியில் நடுரோட்டில் இறக்கிவிட்டு எம்.ஜி.ஆர், அறிவுரை வழங்கியதாக குட்டி கதை கூறிய விஜய், அதே போல எதிராளியை மதிக்க வேண்டும் என்று கூறி தனது உரையை முடித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்