கிருஷ்ணகிரியில் பிகில் திரைப்படத்தை திரையிட தாமதமானதால் ஆத்திரமடைந்த ரசிகர்கள், ரவுண்டானா அருகே இருந்த கடைகளின் பேனர்கள் உடைத்து, கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால், அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டனர். கலவரத்தில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார், விஜய் ரசிகர்கள் 30 பேரை கைது செய்தனர்.