சினிமா

வங்காள நடிகையின் பாலியல் புகார்... நீதிமன்றம் கொடுத்த ட்விஸ்ட்

தந்தி டிவி

வங்காள நடிகை கொடுத்த புகாரில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் கேரளா இயக்குநர் ரஞ்சித் முன்ஜாமீன் பெற்றார்.

மலையாள இயக்குநர் ரஞ்சித், பாலியல் துன்புறுத்தல் செய்ததாக வங்காள நடிகை ஸ்ரீலேகா மித்ரா புகார் அளித்திருந்தார். 2009 ஆம் ஆண்டு திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு அளிப்பதாக கூறி கேரளாவிற்கு அழைத்தவர் அத்துமீறியதாக குறிப்பிட்டு இருந்தார். இ-மெயில் வாயிலாக ஸ்ரீலேகா கொடுத்த புகாரில் கேரள போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த சூழலில் ரஞ்சித், முன்ஜாமீன் கேட்டு கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம், வழக்கில் பதிவு செய்யப்பட்டிருக்கும் குற்ற பிரிவுகள் ஜாமீனுக்கு உட்பட்ட பிரிவுகளாக இருப்பதால் அவருக்கு முன்ஜாமீன் வழங்குவதாக உத்தரவிட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்