அரசன் படத்தில் இருந்து விலகிய இயக்குனர் நெல்சன் வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கும் ‘அரசன்’ படத்திலிருந்து இயக்குனர் நெல்சன் திலீப்குமார் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசன் பட புரோமோவில் சிலம்பரசனுடன் நெல்சன் நடித்திருந்த வீடியோ வைரலானது. ரஜினி, கமல் இணையும் புதிய பட வேலைகளால் அவர் விலகியதாக கூறப்படும் நிலையில், அவருக்குப் பதில் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து அந்தப் கேரக்டரில் ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது. அஸ்வத் மாரிமுத்து ஏற்கனவே சிம்புவை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.