திரையரங்குகளில் வெளியாகும் புதிய படங்கள்
VPF கட்டணம் 2 வாரங்களுக்கு ரத்து செய்யப்பட்டதை அடுத்து, தீபாவளி அன்று திரையரங்குகளில் புதிய படங்கள் வெளியாக உள்ளன. அதன்படி சந்தானத்தின் பிஸ்கோத், இரண்டாம் குத்து, தட்றோம், தூக்றோம் ஆகிய படங்கள் வெளியாக உள்ளன. மேலும் மகேஷ் பாபு நடிப்பில் தெலுங்கில் வெளியான "சரிலேரு நீக்கெவரு" திரைப்படம் தமிழில் டப் செய்யப்பட்டு "இவனுக்கு சரியான ஆள் இல்லை" என்ற பெயரில் தமிழகம் முழுவதும் வெளியாகிறது. திரையரங்குகளை தவிர்த்து, சூர்யாவின் சூரரை போற்று, நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் உள்ளிட்ட திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
நடிகை ஆத்மிகாவின் அசத்தலான வீடியோ
நடிகை ஆத்மிகா, புதிய வீடியோ ஒன்றை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சித் ஸ்ரீராம் பாடியுள்ள "போ போன் என் இதயம் பிரிந்து" என்ற காதல் தோல்வி பாடலுக்கு முக பாவனைகள் மூலம் வீடியோ வெளியிட்டுள்ளார். மீசைய முறுக்கு திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமான ஆத்மிகா தற்போது விஜய் ஆண்டனியுடன் புதிய படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
நடிகை சமந்தாவின் உடற்பயிற்சி வீடியோ
நடிகை சமந்தா உடற்பயிற்சி செய்யும் வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், சைவ உணவுகள் மூலம் கட்டுக்கோப்பான உடலை பெற முடியாது என்ற கட்டுக்கதையை, உடைப்போம் என்றும் சமந்தா பதிவிட்டுள்ளார். சமந்தா முழுமையாக அசைவு உணவுகளை தவிர்த்து, சைவ உணவுகளை கடைபிடித்து வருவது குறிப்பிடத்தக்கது.