சினிமா

காலாவில் ரஜினி பயன்படுத்திய ஜீப் மகேந்திரா வசம் சென்றது

காலா படத்தில் பயன்படுத்தப்பட்ட ஜீப்பை வாங்கி விட்டதாக மகேந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திரா தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

தனது நிறுவன வாகனங்களை, மற்றவர்கள் ஆச்சர்யபடும் அளவிற்கு பயன்படுத்துபவர்களை கண்டறிந்து மகேந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திரா ஊக்கப்படுவது தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், காலா FEVER ஆனந்த் மகேந்திராவையும் பற்றிக் கொண்டுள்ளது.

2017ம் ஆண்டு, கேரளாவை சேர்ந்த ஆட்டொ டிரைவர் ஒருவர், தனது ஆட்டோவின் பின் பக்கத்தை மகேந்திரா ஸ்கார்பியோ போல் வடிவமைத்தை, கேரளாவை சேர்ந்த ஒருவர், புகைப்படம் எடுத்து, இந்திய சாலையில் Scorpio ஏற்படுத்திய தாக்கத்தை பாருங்கள் என்று ஆனந்த மகேந்திராவை டுவிட்டரில் டேக் செய்திருந்தார். அதை பார்த்த ஆனந்த் மகேந்திரா, அந்த ஆட்டோ தனக்கு வேண்டும் என்றும், அதற்கு பதில் பெரிய 4 சக்கர வாகனம் ஒன்றை தருவதாகவும், ஆட்டோ டிரைவர் எங்கு இருக்கிறார் என்றும் கேட்டிருந்தார்... கடைசியில், ஆட்டோ டிரைவரை தேடிப்படித்த ஆனந்த மகேந்தரா, அவரிடம் இருந்த ஆட்டோவை வாங்கி கொண்டு, புதிய 4 சக்கர வாகனத்தை பரிசளித்தார்.

அதே போன்று, கர்நாடகாவில், ஷில்பா என்ற பெண், மகேந்திரா நிறுவனத்தின் போலேரோ வாகனத்தை வடிவமைத்து, அதில் உணவகம் ஒன்றை நடத்தி வந்தார். வழக்கம் போல் டுவிட்டரில் ஆனந்த மகேந்திராவை டேக் செய்து, ஷில்பா நடத்தி வந்த உணவகத்தின் போட்டோ பகிரப்பட்டது. அதை பார்த்த ஆனந்த் மகேந்திரா, உணவகத்தின் வளர்ச்சிக்கு மகேந்திரா சிறு உதவி புரிந்ததில் மகிழ்ச்சி என்றும், அந்த பெண் தனது உணவகத்தை விரிவு படுத்த இன்னொரு பொலேரோ வாகனத்தை தர விரும்புவதாகவும் தெரிவித்திருந்தார்.

அதை தொடந்து காலா FEVER ஆனந்த் மகேந்திராவையும் விட்டு வைக்கவில்லை. காலா படத்தில் FIRST look போஸ்டரில், ரஜினிகாந்த MAHINDRA THAR மீது அமர்ந்திருப்பது போல் ஒரு புகைப்படம் வெளியானது. அதை பார்த்த ஆனந்த் மகேந்திரா, காலா படத்தில் பயன்படுத்தப்பட்ட மகேந்திரா தார் ஜீப்பை தான் வாங்கி கொள்ள விரும்புவதாகவும், அந்த தார் ஜீப் எங்கு இருக்கிறது என்பதை யாராவது தெரியப்படுத்துங்கள் என்று அறிவித்திருந்தார். அதை தொடந்து, தற்போது, அந்த தார் ஜீப்பை வாங்கி விட்டதாக தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள மகேந்திரா ரிசர்ச் வேலியில் வைக்கப்பட்டுள்ள அந்த தார் ஜீப்பில், தலைவரை போலவே போஸ் கொடுத்து ஒரு போட்டோ போட தன் ஊழியர்களுக்கு உத்தரவிட்டதாகவும், அந்த போட்டோ இது தான் என்றும் மகேந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திரா டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்