சினிமா

ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ள எமி ஜாக்சன்

தந்தி டிவி

மதராசப்பட்டினத்தில் வெள்ளைக்கார துரையம்மாவாக நடித்த நடிகை எமி ஜாக்சன், ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழில் ஐ, தாண்டவம், தெறி உள்ளிட்ட படங்களில் நடித்த எமி ஜாக்சன் கடைசியாக அருண் விஜயுடன் மிஷன் சாப்டர் 1 படத்தில் நடித்திருந்தார். தற்போது மாடலிங்கில் பிசியாக உள்ள எமி ஜாக்சன், லண்டனை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை காதலித்து வந்தார். இருவருக்கும் அழகான ஒரு மகன் உள்ளார். இதற்கிடையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்த நிலையில், பாலிவுட் நடிகர் எட் வெஸ்டவிக்கிற்கும் எமி ஜாக்சனுக்கும் காதல் மலர்ந்தது. இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்கவுள்ள நிலையில், திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் அவர் முகத்தில் பல மாற்றங்கள் தெரியவர, அவர் ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளது தெரியவந்தது. ஒரு சிலர் ஏஞ்சலினா ஜோலி போல் இருப்பதாக கூறினாலும், எமி ஜாக்சனின் அழகு குறைந்து விட்டதாக பலர் விமர்சித்து வருகின்றனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி