கொரோனா தாக்கம் எதிரொலியாக நடிகர் அமிதாப் பச்சன் ரசிகர்களை சந்திப்பதை தவிர்த்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை தோறும் மும்பையில் உள்ள தனது வீட்டில், அவர் தனது ரசிகர்களை சந்திப்பது வழக்கம். இந்த வாரம் ரசிகர்கள் தன்னை சந்திக்க வரவேண்டாம் என அமிதாப் பச்சன் தனது டுவிட்டர் பதிவில் வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா தாக்குதலில் இருந்து அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.