AMERICA GOT TALENT என்ற பிரபல நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்தியக்குழுவினர் பேட்ட படத்தின் பாடலுக்கு சாகச நடனமாடி பார்வையாளர்களை அசத்தியுள்ளனர். இதனை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள இசை அமைப்பாளர் அனிரூத், தமது பாடலுக்கு உலக அரங்கில் அசத்தலான நடனத்தை ஆடியுள்ளதாக பாராட்டியுள்ளார்.