சினிமா

"சுசிகணேசனால் நானும் பல சங்கடங்களை அனுபவித்தேன்" - அமலாபால்

இயக்குநர் சுசிகணேசனால் தானும் பல சங்கடங்களை அனுபவித்ததாக திருட்டுப் பயலே படத்தின் 2 ஆம் பாகத்தில் நடித்த நடிகை அமலாபால் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.

தந்தி டிவி

இயக்குநர் சுசிகணேசன் மீது கவிஞரும், ஆவணப்பட இயக்குநருமான லீனா மணிமேகலை மீ டூ இயக்கத்தின் வாயிலாக குற்றச்சாட்டு முன்வைத்திருந்தார். இந்த நிலையில் லீனா மணிமேகலைக்கு தான் ஆதரவு தெரிவிப்பதாக நடிகை அமலாபால் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அமலாபால், திருட்டுப்பயலே படத்தின் 2 ஆம் பாகத்தில் நடித்த போது அவரால் பல சங்கடங்களை அனுபவித்தேன் எனவும், இரட்டை அர்த்தம் கொண்ட பேச்சுகளையும் தான் சந்தித்து இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். பெண்ணியத்துக்கு சிறிதும் மரியாதை தரத் தெரியாத ஒரு மனிதரிடம் லீனா மணிமேகலை என்ன பாடுபட்டு இருப்பார் என்பதை தன்னால் புரிந்து கொள்ள முடிகிறது எனவும், இதேபோல் மற்ற துறைகளில் இருந்தும் மீ டூ குறித்த பதிவுகள் வெளிவர வேண்டும் என அமலாபால் தெரிவித்துள்ளார்.

"சுசிகணேசனும் அவரது மனைவியும் என்னை அசிங்கப்படுத்தினார்கள்"

இதனிடையே சுசிகணேசனை கண்டு தனக்கு பயமில்லை என நடிகை அமலாபால் பதிவிட்டுள்ளார். இயக்குநர் சுசிகணேசனும், அவரது மனைவியும் தன்னிடம் செல்போனில் பேசியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சுசிகணேசன் தன் மனைவியோடு சேர்ந்து கொண்டு தன்னை அசிங்கப்படுத்தியதாகவும், இதனால் நான் பயப்படுவேன் என்று நினைத்தார்கள் என்றும் தெரிவித்துள்ளார். ஆனால் சுசிகணேசனை கண்டு தனக்கு பயமில்லை எனவும் அமலா பால் விளக்கம் அளித்துள்ளார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி