சினிமா

பிரபல பாடகி போட்ட போஸ்ட் - அதிர்ச்சியில் ரசிகர்கள்

தந்தி டிவி

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இசையில், ஓரம் போ திரைப்படத்தில் இது என்ன மாயம் என்ற பாடலை பாடியர் அல்கா யாக்னிக். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் பல பாடல்கள் பாடியுள்ள அவர், அண்மையில் சமூக வலைத்தளத்தில் அதிர்ச்சி செய்தி வெளியிட்டார். சில வாரங்களுக்கு முன்பு, விமானத்தில் இருந்து வெளியேறும் போது, திடீரென்று தன்னால் எதையும் கேட்க முடியாத நிலை ஏற்பட்டதாக கூறியுள்ளார். இதுகுறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்த போது, வைரஸ் தாக்குதலின் காரணமாக, தனக்கு அரிய வகை செவித்திறன் குறைபாடு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் தனக்கு கேட்கும் திறன் இல்லை என்றும் உருக்கத்துடன் பதிவிட்டுள்ளார். தனக்காக பிரார்த்திக்கும்படி தனது ரசிகர்களிடம் கேட்டுக்கொண்ட அல்கா யாக்னிக், விரைவில் குணமடைந்து திரும்புவேன் என தெரிவித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்