பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் இயக்குநர் பிரியதர்ஷன் கூட்டணியில் உருவாகியுள்ள “பூத் பங்களா படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி உள்ளது...
த ஹாரர்-காமெடி படமாக உருவாகியுள்ள இந்த படத்தின் உருவாகியுள்ள மோஷன் போஸ்டர் ஒன்றை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர்... அதில் இந்த திரைப்படம் ஏப்ரல் பத்தாம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது...
இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கத்தில் உருவாகும் பூத் பங்களா”திரைப்படத்தில், அக்ஷய் குமாருடன் வாமிகா கபி, தபு, பரேஷ் ராவல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
மேலும், ராஜ்பால் யாதவ் மற்றும் மிதிலா பால்கர் ஆகியோரும் முக்கிய வேடங்களில் தோன்றுகின்றனர்.
இப்படத்தில் மிதிலா பால்கர், அக்ஷய் குமாரின் சகோதரியாக நடிக்கிறார்.