நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றிக்கு பின்னர் அஜித் - இயக்குநர் விநோத் - தயாரிப்பாளர் போனி கபூர் இணைந்திருக்கும் படம் வலிமை. படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இதுவரை படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இதனை பயன்படுத்தி படம் குறித்து பல்வேறு வதந்திகள் இணையத்தில் பரவி வருகின்றன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக வலிமை படம் பற்றி விரைவில் படக்குழு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட உள்ளது.