சினிமா

நடிகை ராதா மீது மீண்டும் பரபரப்பு புகார்

தந்தி டிவி

பிட்காயினில் முதலீடு செய்த பணம் தொடர்பாக ஒருவரை தாக்கியதாக நடிகை ராதா மீது மீண்டும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை நெற்குன்றம் பகுதியை சேர்ந்த எல்ஐசி ஏஜென்ட் முரளி கிருஷ்ணன் என்பவர் கூறியதைத் தொடர்ந்து, நடிகை ராதா மற்றும் அவரது மகன், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு பிட்காயினில் 90 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்ததாக கூறப்படுகிறது. ஆனால், இதுவரை பணத்தை திருப்பிக் கொடுக்காததால், முரளி கிருஷ்ணனுக்கும், நடிகை ராதாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. வாக்குவாதம் முற்றியதில், நடிகை ராதா மற்றும் அவரது மகன், முரளி கிருஷ்ணனை அடித்து கீழே தள்ளியதில், அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுதொடர்பாக முரளி கிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த மாதம் பிரான்சிஸ் ரிச்சர்ச் என்ற இளைஞரை தாக்கியதாக விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், நடிகை ராதா மீது நடவடிக்கை எடுக்க புகார் அளிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

CMVijay | ``புகார் அளிக்க இனி இந்த Whatsapp நம்பர் போதும்..'' தமிழக அரசு அதிரடி

Rain | வெளுக்கப்போகும் கனமழை.. எந்த மாவட்டங்கள்..? வானிலை மையம் அப்டேட்

BREAKING || "அனைத்துக்கும் தயாராக இருக்க வேண்டும்" - அலர்ட் செய்த CM விஜய்

CM Vijay | TVK | Monsoon | சீரியஸ் மீட்டிங் - உறுதியாக சொன்ன CM விஜய்

Byelection | தாராபுரம் இடைத்தேர்தல் - தொகுதி முழுக்க `செக்’