சினிமா

Malaysia || மலேசியாவில் நடிகை மிருணாளினி - ஆன்மீக பேச்சாளர் மகாவிஷ்ணு திருமணம்

மலேசியாவில் நடிகை மிருணாளினி - ஆன்மீக பேச்சாளர் மகாவிஷ்ணு திருமணம்

thanthitv

Malaysia || மலேசியாவில் நடிகை மிருணாளினி - ஆன்மீக பேச்சாளர் மகாவிஷ்ணு திருமணம்சூப்பர் டீலக்ஸ்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை மிருணாளினி ரவி, தொடர்ந்து 'சாம்பியன்', 'எம்ஜிஆர் மகன்', 'கோப்ரா' மற்றும் 'ரோமியோ' உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் கவனம் ஈர்த்தார். 2024ம் ஆண்டிற்கு பிறகு சினிமாவில் இருந்து சற்று ஒதுங்கியிருந்த இவர், ஆன்மிகப் பேச்சாளர் மகாவிஷ்ணுவைக் காதலிப்பதாகச் சில நாட்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். ​இந்நிலையில், மிருணாளினி மற்றும் மகாவிஷ்ணுவின் திருமணம் மலேசியாவின் லங்காவி தீவில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் விமரிசையாக நடைபெற்றுள்ளது. தங்களது திருமணப் புகைப்படங்களை மிருணாளினி சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ள நிலையில், ரசிகர்களும் திரையுலகினரும் புதுமணத் தம்பதிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

High Court | Cattles | சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகள் - உயர்நீதிமன்றம் உத்தரவு

BREAKING || தி.மலை தீபம் கானவரும் பக்தர்களுக்கு நற்செய்தி - முதல்முறையாக இலவசம்

BREAKING || துரைமுருகன் மீதான பரபரப்பு புகார் - வெளியானது FIR

Dindigul | death பறிபோன 3 பிஞ்சு உயிர்கள் சோகத்தில் மூழ்கிய கிராமம்

Checkanurani | TN Police | செக்கானூரணி காவல் மரணம்.. 5 மணிநேரத்தை தாண்டி பரபரக்கும் விசாரணை