சினிமா

Actress | Case Filled | திருமண ஆசை காட்டி லண்டன் இளைஞரை மோசடி செய்ததாக நடிகை மீது பரபரப்பு புகார்

திருமண ஆசை காட்டி லண்டன் இளைஞரை மோசடி செய்ததாக நடிகை மீது பரபரப்பு புகார்

thanthitv

Actress | Case Filled | Ashu Reddyதிருமண ஆசை காட்டி லண்டன் இளைஞரை மோசடி செய்ததாக நடிகை மீது பரபரப்பு புகார்

லண்டன் இளைஞரை ஏமாற்றியதாக தெலுங்கு நடிகை அஷு ரெட்டி மீது புகார் தெலுங்கு பிக்பாஸ் பிரபலமான நடிகை அஷு ரெட்டி, லண்டன் வாழ் இந்திய இளைஞரைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி சுமார் ஒன்பது கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக ஹைதராபாத் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட இளைஞரின் தந்தை சத்யநாராயணா அளித்துள்ள புகாரில், தனது மகனிடம் திருமண ஆசை காட்டிய அஷு ரெட்டி, ஐந்து கிலோ தங்கம், விலையுயர்ந்த சொகுசு கார்கள் மற்றும் பல அடுக்குமாடி குடியிருப்புகளைத் தனது பெயரில் எழுதி வாங்கியதா குற்றம்சாட்டியுள்ளார். ஹைதராபாத் போலீசார் இதனைப் பொருளாதாரக் குற்றப் பிரிவின் கீழ் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே, தன் மீதான இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள அஷு ரெட்டி, வதந்திகளைப் பரப்புபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Summer | Ice cream | அதிகரித்த ஐஸ்கிரீம் விற்பனை - ஸ்ட்ரிக்ட் ரூல்ஸை இறக்கிய உணவு பாதுகாப்புத் துறை

Breaking | Heavy Rain | TN Rains | வரும் 30ம் தேதி 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

Neet Exam 2026 | மாணவர்களே ரெடியா!.. நாளை ஹால் டிக்கெட் வெளியீடு

Kollywood | Cinema | Actors | உச்ச நடிகர்களுக்கு செக்..? பிரடியூசர் சங்கம் அதிரடி

Firecracker Factory | கோடை வெயிலால் கட்டுப்பாடு.. பட்டாசு ஆலைகளில் முன்னெச்சரிக்கை