சினிமா

"நாளைய முதல்வரே" - பரபரப்பை ஏற்படுத்திய நடிகர் விஜயின் போஸ்டர்.

நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு நாளைய முதல்வரே என்று நெல்லையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன

தந்தி டிவி

நடிகர் விஜய், தனது 44வது பிறந்தநாளை வரும் 22ஆம் தேதி கொண்டாடுகிறார். தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிர் இழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ரசிகர்கள் தனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என்று நடிகர் விஜய் அறிவித்திருந்தார். இருப்பினும், அவரின் ரசிகர்கள், நாளைய முதல்வரே என தமிழக சட்டமன்றப் படத்துடன் நெல்லையில் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.

"நான் நேசிப்பது போல் ரசிகர்களும் விஜய்யை நேசிக்கின்றனர்" - நடிகர் விஜய்யின் தந்தை சந்திரசேகர்

ரசிகர்கள் விஜய் மீது வைத்துள்ள பாசத்தின் வெளிப்பாடாக இந்த போஸ்டர்கள் இடம்பெற்றுள்ளதாகவும், ரஜினி உட்பட பல நடிகர்களுக்கு ரசிகர்கள் இவ்வாறு போஸ்டர் வைத்துள்ளதாகவும் நடிகர் விஜய்யின் தந்தை சந்திரசேகர் விளக்கமளித்துள்ளார்.

Helicopter Crash | புறப்பட்ட சில நிமிடங்களில்..கிராமத்தில் சிதறி கிடந்த ஹெலிகாப்டர்

CM Vijay | Group Exam |TNPSC | அரசுப் பணி..! இளைஞர்களுக்கு கொண்டாட்ட அறிவிப்பு.. தமிழக அரசு அதிரடி

Anbilmahesh Case | அன்பில் மகேஷ் வழக்கு - `தீர்ப்பு’ குறித்து அறிவித்த ஸ்பெஷல் கோர்ட்

Gingee Girl Missing | செஞ்சி சிறுமி சம்பவம் - விசாரணை வளையத்துக்குள் புதிதாக வந்த 5 பேர்..

TN Weather Update| மெல்ல மெல்ல பவர் ஏறும் புது சிஸ்டம்.. 5ம் தேதி வரை தமிழகத்திற்கு கன்பார்ம்