வடிவேலுவுக்காக சிறப்பு போஸ்டர் வெளியிட்ட 'மாரீசன்' படக்குழு
நடிகர் வடிவேலுவின் பிறந்த நாளை ஒட்டி, மாரீசன் படக்குழு சிறப்பு போஸ்டரை வெளியிட்டுள்ளது. மாமன்னன் படத்தின் வெற்றிக்கு பிறகு, ஃபகத் ஃபாசிலுடன் சேர்ந்து வடிவேலு மாரீசன் என்ற படத்தில் நடித்து வருகிறார். சூப்பர் குட்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பில், சுதீஸ் சங்கர் இயக்கும் இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.