சினிமா

நடிகர் வடிவேலு அதிரடி முடிவு : புத்தாண்டில் புதிய பரிணாமம்

நடிகர் வடிவேலு எப்போது திரையில் தோன்றுவார் என எதிர்பார்த்து காத்திருந்த, ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

தந்தி டிவி

வசனத்தில் மட்டுமல்ல, தனது உடல் மொழியால், மக்களை மகிழ்வித்த மாபெரும் கலைஞன், நடிகர் வடிவேலு. மீம்ஸ்களில் மூழ்கி கிடக்கும், தற்போதைய தலைமுறையின் தலைவனாகவே வலம் வருகிறார், வடிவேலு. அனைத்து விதமான தருணங்களுக்கும், வடிவேலுவின் வசனங்கள் அப்படியே பொருந்தும். சில காலங்கள் சினிமாவில் நடிக்காமல் இருந்த வடிவேலு, நீண்ட இடைவெளிக்கு பிறகு ஹீரோவாக நடித்த தெனாலிராமன், எலி ஆகிய படங்கள் பெரிய அளவிற்கு சோபிக்கவில்லை. அதன் பின்னர், விஜயுடன் மெர்சல் படத்தில் கலக்கினார்.மெர்சல் படத்திற்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் வடிவேலு கலக்குவார் என எதிர்பார்க்கப்படடது.

ஆனால், ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்த நிலையில், தற்போது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ள இணையதள தொடர்கள் மீது வடிவேலுவின் கவனம் விழுந்துள்ளதாக கூறப்படுகிறது. ஜெயலலிதாவின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்டுள்ள குயின் இணையதள தொடர் மக்கள் மத்தியில், வரவேற்பை பெற்றுள்ளதும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.

முன்னணி நட்சத்திரங்கள் இணையதள தொடரில் களமிறங்கியுள்ள நிலையில், வடிவேலுவும் இது தொடர்பாக புதிய முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இணையதள தொடரில் நடிப்பது தொடர்பாக புத்தாண்டில் அறிவிப்பு வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெள்ளித்திரையில் வடிவேல் வருவாரா எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், இணையதள தொடர் மூலம் நம் செல்போனுக்கே வர உள்ளார், வடிவேல்...

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்