சினிமா

நடிகர் சிவகுமாருடன் செல்ஃபி எடுக்க முயன்ற ரசிகர் : செல்போனை கோபமாக தட்டிவிட்ட சிவகுமார்

செல்ஃபி எடுக்க முற்பட்ட ரசிகர் ஒருவரின் செல்போனை, நடிகர் சிவகுமார் கோபமாக தட்டிவிடும் காட்சிகள், இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

தந்தி டிவி

* மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் சிவக்குமார் அங்கு நின்றிருந்தவர் செல்பி எடுக்க முயன்றதால், கோபமடைந்து செல்போனை

தட்டிவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

* பெரியார் பேருந்து நிலையத்தில் கருத்தரிப்பு மையம் திறப்பு விழாவில் பங்கேற்ற சிவக்குமாருடன்,அங்கு நின்றிருந்தவர் செல்பி எடுக்க முயன்றார். ஆனால் அந்த இளைஞனின் கையில் இருந்த செல்போனை சிவக்குமார் தட்டி விட்டார்.

செல்பி எடுத்த இளைஞரின் கைப்பேசியை தட்டி விட்டது ஏன்?

* செல்போனை தட்டி விட்டது குறித்து நடிகர் சிவகுமார் விளக்கம் அளித்துள்ளார். செல்பி எடுப்பது அவரவர் சொந்த விஷயம் என்று குறிப்பிட்டுள்ள நடிகர் சிவக்குமார், குடும்பத்துடன் சுற்றுலா செல்லும் இடங்களில் எப்படி வேண்டுமானாலும் செல்ஃபி எடுத்து கொள்ளுங்கள் என்று தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

* ஆனால் பொது இடங்களில் நடைபெறும் விழாவில் பங்கேற்க செல்லும் போது பாதுகாப்பிற்கு வரும் ஆட்களை ஓரம் தள்ளிவிட்டு செல்பி எடுக்கிறேன் என்று பலர், நடக்க விட முடியாமல் செய்வது, நியாயமா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்