சினிமா

நடிகர் ரஜினி மருத்துவமனையில் அனுமதி

ரத்த அழுத்தத்தால் ஏற்பட்ட உடல்சேர்வு காரணமாக நடிகர் ரஜினிகாந்த் ஐதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தந்தி டிவி

அப்போலோ மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களாக ஐதாராபாத்தில் படப்பிடிப்பில் இருந்ததாகவும், படப்பிடிப்பில் இருந்த சிலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்த்துக்கு கடந்த 22ம் தேதி எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு தொற்று இல்லை என உறுதியானதாகவும் மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்று முதல் அவர் தனிமைபடுத்திக்கொண்டு, கண்காணிப்பில் இருந்து வந்ததாக கூறப்பட்டுள்ளது. ரஜினிக்கு கொரோனா அறிகுறி எதுவும் இல்லாத நிலையில், ரத்த அழுத்தத்தில் ஏற்ற இறக்கம் ஏற்பட்டதால்தான் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாகவும், இரத்த அழுத்தம் சீரானவுடன் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரத்த அழுத்தத்தை தவிர மற்ற எந்த பாதிப்பும் இல்லாமல் ரஜினிகாந்தின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்