திரைக்கதைக்காக ஒரே படத்தில் 2 கதாநாயகர்கள் நடிப்பதால் நடிகர்கள் மதிப்பு குறையப்போவதில்லை என திரைப்பட நடிகர் கலையரசன் தெரிவித்துள்ளார்.. இயக்குனர் பா.ரஞ்சித் தயாரிப்பில் தினேஷ், கலையரசன் நடிப்பில் வெளியாகியுள்ள தண்டகாரண்யம் திரைப்பட குழுவினர் சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள திரையரங்கிற்கு வருகை தந்தனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், ஒரே நேரத்தில் படங்களில் நடிக்கப் போவதில்லை என்றும், பா.ரஞ்சித் இயக்கத்தில் தற்போது வேட்டுவம் படத்தில் மட்டும் நடித்து வருவதாகவும் குறிப்பிட்டார்...