சினிமா

நடிகர் ஜூனியர் பாலையா மறைவு.. இன்று உடல் அடக்கம் | Junior Balaiah

தந்தி டிவி

பிரபல குணச்சித்திர நடிகர் ஜூனியர் பாலையா உடல் நலக் குறைவால் காலமானார். அவரது இறுதிச் சடங்குகள் இன்று சென்னையில் நடைபெறுகிறது.

பழம்பெரும் நடிகர் டி. எஸ். பாலையாவின் மகனான ஜுனியர் பாலையா, 'மேல்நாட்டு மருமகள்' படத்தின் மூலம் தனது திரைப்பயணத்தைத் துவங்கி 280 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். 70 வயதான ஜூனியர் பாலையா, படுக்கையில் இருந்து கீழே விழுந்து சிகிச்சை எடுத்து வந்த நிலையில், சென்னை வளசரவாக்கம் இல்லத்தில் நேற்று காலை உயிரிழந்தார். மறைந்த ஜூனியர் பாலையாவின் இறுதிச் சடங்குகள் இன்று நடைபெறுகிறது. பிற்பகலில் அவரது உடல் அடக்கம் செய்யப்படும். அவரது உடலுக்கு கோவை சரளா, சி.ஆர்.சரஸ்வதி, செம்புலி ஜெகன், போஸ் வெங்கட், ஸ்ரீமன் உள்ளிட்ட திரையுலகத்தினர் அஞ்சலி செலுத்தினார்கள்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்