சினிமா

Marriage| பிள்ளைகள் முன்னிலையில்.. 61 வயதில் 3வது திருமணம் செய்துகொண்ட பிரபலம்

பிள்ளைகள் முன்னிலையில்.. 61 வயதில் 3வது திருமணம் செய்துகொண்ட பிரபலம்

thanthitv

பாலிவுட் நட்சத்திரம் அமீர்கான் மீண்டும் திருமணம் செய்துகொண்டுள்ளார்.. தனது நீண்ட நாள் தோழியான கெளரி ஸ்ப்ராட்டை மும்பையில் உள்ள தனது இல்லத்தில் அமீர் கான் கரம் பிடித்தார். அமீர் கானின் இல்லத்தில் நடைபெற்ற இந்தத் திருமணம் மிகவும் தனிப்பட்ட முறையில், சுமார் 100 முதல் 150 நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. சிறப்புத் திருமணச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட இந்த விழாவில், அமீர் கானின் பிள்ளைகளான ஜுனைத் மற்றும் ஐரா, மற்றும் கெளரியின் மகன் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், தம்பதிகளுக்கு வாழ்த்து தெரிவித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ள வீடியோ வைரலாகி வருகிறது. 61 வயதான அமீர் கானின் மூன்றாவது திருமணமான இது, பாலிவுட் திரையுலகில் பெரும் பேசும்பொருளாகியுள்ளது

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்