சினிமா

66வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா - சிறந்த நடிகைக்கான விருதை பெற்றார் கீர்த்தி சுரேஷ்

சிறந்த நடிகைக்கான தேசிய விருது "மகாநடி" படத்திற்காக கீர்த்தி சுரேஷ்க்கு வழங்கப்பட்டது.

தந்தி டிவி

டெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெற்ற விழாவில், 66வது தேசிய திரைப்பட விருதுகளை குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு விருதுகளை வழங்கினார். விழாவில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரும் கலந்து கொண்டார்.

இதில் பிரியா கிருஷ்ணசுவாமி இயக்கிய "பாரம்" என்ற தமிழ் படம் சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருதை பெற்றது. சிறந்த நடிகருக்கான விருதை ஆயுஷ்மான் குரானா மற்றும் விக்கி கவுசல் பெற்றனர். சிறந்த நடிகைக்கான விருதை "மகாநடி" படத்திற்காக கீர்த்தி சுரேஷ்க்கு வழங்கப்பட்டது. சிறந்த சண்டை இயக்கம், ஸ்பெஷல் எபெக்ட்ஸ் விருதுகளை கே.ஜி.எப் படம் வென்றது.

தாதா சாகேப் பால்கே விருதுக்கு நடிகர் அமிதாப் பச்சன் தேர்வாகியிருந்த நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக அவர் விருது வழங்கும் விழாவில் பங்கேற்கவில்லை.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்