சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா பங்கேற்றார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு லயோலா கல்லூரிக்கு வந்தது தனது மாணவர் பருவ நினைவுகளை மீண்டும் கொண்டு வந்ததாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். லயோலா கல்லூரி தனக்கு படிப்பை மட்டுமின்றி வாழ்க்கையையும் கற்றுக்கொடுத்த இடம் என்றும் சூர்யா கூறினார்.