சினிமா

2.0 பட வில்லனுக்கு எழுத்தாளர் பெயரா? - எழுத்தாளர் ஜெயமோகன் விளக்கம்

'2 பாய்ன்ட் ஓ' திரைப்படத்தின் வில்லனுக்கு, எழுத்தாளர் பி.ஏ.கிருஷ்ணன் பெயர் வைக்கப்பட்டுள்ளதா? என்ற சர்ச்சைக்கு எழுத்தாளர் ஜெயமோகன் விளக்கமளித்துள்ளார்.

தந்தி டிவி
'2 பாய்ன்ட் ஓ' திரைப்படத்தின் வில்லனுக்கு, எழுத்தாளர் பி.ஏ.கிருஷ்ணன் பெயர் வைக்கப்பட்டுள்ளதா? என்ற சர்ச்சைக்கு எழுத்தாளர் ஜெயமோகன் விளக்கமளித்துள்ளார். தமது சமூக வலை தள பக்கத்தில் பதிவிட்டுள்ள ஜெயமோகன், 'பட்ஷி ராஜன்' என்பது எழுத்தாளர் பி.ஏ.கிருஷ்ணன் பெயர் அல்ல என்றும், அவரது தந்தை நாங்குநேரி பட்சிராஜ அய்யங்கார் பெயர் என்றும் விளக்கமளித்துள்ளார். இந்த திரைப்படத்தில், நடிகர் கமல்ஹாசன் நடிப்பதாக இருந்ததாகவும், அவருக்காகவே மரபு சார்ந்த பலவிஷயங்கள் சேர்க்கப்பட்டன என்றும் கூறியுள்ளார். மேலும், அந்தப் பெயர் 'வில்லனு'க்கு வைக்கப்படவில்லை, படத்தில் அவர் வில்லன் அல்ல என்றும் அவர் தான் படத்தின் உணர்ச்சிகரமான மையம் என்றும் ஜெயமோகன் விளக்கமளித்துள்ளார்.

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்