சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான 'தர்மதுரை' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், படம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி, இயக்குநர் சீனு ராமசாமி தனது எக்ஸ் பக்கத்தில் எமோஷனலான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "மக்களின் மனங்களில் ஒரு திரைப்படம் தொடர்ந்து நிலைத்திருக்கிறதா என்பதில்தான் அதன் உண்மையான வெற்றியோ அல்லது தோல்வியோ அடங்கியுள்ளதாக தாம் கருதுவதாகவும், மக்களின் அளப்பரிய அன்பினால் தர்மதுரை 10வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த படத்தைத் தயாரிக்க வாய்ப்பளித்த தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் மற்றும் படத்தில் பணியாற்றிய அனைத்துக் கலைஞர்களுக்கும் தனது மனமார்ந்த நன்றியை அவர் தெரிவித்து கொண்டுள்ளார்.