Tiruppur | Boiler Blast | Police | வெடித்து சிதறிய பாய்லர்.. ஹாஸ்பிடலில் 9 பெண்கள்.. பதற்றத்தில் பல்லடம் #Tiruppur #Palladam #BoilerBlast #TNPolice திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த அருள்புரத்தில் செயல்பட்டு வரும் தனியார் பனியன் நிறுவனத்தில் 500க்கும் மேற்பட்ட வட மற்றும் தென் மாவட்டங்களை சேர்த்தோர் பணி செய்து வருகின்றனர்.இந்த நிலையில் இன்று வழக்கம் போல் வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது.தொடர்ந்து மதிய உணவு இடைவேலைக்கு பலரும் சென்ற நிலையில் அங்கு சிலர் வேலை செய்து வந்துள்ளனர்.அப்போது அங்கிருந்த அயர்னிங் பாய்லர் திடீரென வெடித்ததாக கூறப்படுகிறது.மேலும் பாய்லர் பலத்த சத்தத்தில் வெடித்ததால் 9 பெண்கள் அதிர்ச்சியில் மயக்கம் அடைந்தனர்.இதனையடுத்து அங்கு வேலை செய்யும் சக பணியாளர்கள் மயக்கமடைந்த 9 பேரையும் மீட்டு பல்லடத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.தொடர்ந்து அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இச்சம்பவம் பல்லடத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மதிய உணவு இடைவேளையில் இந்த விபத்து நடைபெற்றதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.