TN Govt | 8th Pay Commission | எகிற போகும் சம்பளம்.. ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்
தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு எட்டாவது ஊதிய குழு அமல்படுத்துவது குறித்து பரிசீலனை செய்யப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது . அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு முறையும் ஊதியக்குழு அமைத்து ஊதிய விகிதங்கள் திருத்தம் செய்யப்படுகின்றன. ஏற்கனவே ஏழு ஊதியக்குழு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், எட்டாவது ஊதியக்குழு எப்போது அமலாகும் என்ற எதிர்பார்ப்பில் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் உள்ளனர். இந்த நிலையில், இது குறித்து முதலமைச்சர் தனிப்பிரிவில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் சார்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு, தமிழக அரசு பதிலளித்திருக்கிறது. அரசு கூடுதல் செயலாளர் பரிமளசெல்வி அளித்துள்ள பதிலில், மத்திய அரசின் எட்டாவது ஊதியக்குழு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, திருத்திய ஊதிய விகிதம் அமல்படுத்தப்பட்ட பின்னர், அந்த அறிக்கையின் அடிப்படையில் எட்டாவது ஊதிய குழு அமைப்பது குறித்து பரிசீலனை செய்யப்படும் என, பரிமள செல்வி தெரிவித்துள்ளார்.