Keralam Land Slide | நேபாள் பயங்கரத்தை கண்முன் நிறுத்திய காட்சி | கேரளாவில் அடுத்தடுத்து கோரம்
#keralam #landslide #disaster #thanthitv
கேரள நிலச்சரிவில் சென்னை பெண் உள்பட 3 பேர் பலி கேரளாவில் அடுத்தடுத்து நிலச்சரிவு - சென்னை பெண் உள்பட 3 பேர் பலி கனமழையால் இடுக்கி, கோட்டயம் மாவட்டங்களில் 3 இடங்களில் நிலச்சரிவு கோட்டயம் நிலச்சரிவில் சிக்கி சென்னை பெண் சங்கீதா உயிரிழந்த சோகம் கேரளாவில் அடுத்தடுத்து நிலச்சரிவு - சென்னை பெண் உள்பட 3 பேர் பலி கேரளம் மாநிலத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், இடுக்கி மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் சென்னை பெண் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இடுக்கி மாவட்டம் வட்டவட பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் நேற்று ஏற்பட்ட நிலச்சரிவில் தொழிலாளர்கள் தங்கியிருந்த வீடு இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கி கொட்டகம்பூரைச் சேர்ந்த பாலகிருஷ்ணன், அவரது சகோதரி சின்னு ஆகிய இருவரும் உயிரிழந்தனர். மாரியம்மா என்பவர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேபோல், கோட்டயம் அருகே டீக்காய் வேலத்துச்சேரியில் ஏற்பட்ட நிலச்சரிவில், வாகமண் சுற்றுலா தலத்திற்கு சென்று திரும்பிய பெண்கள் சிக்கினர். இதில் சென்னை ஜவகர் நகரைச் சேர்ந்த 35 வயதான சங்கீதா அருள்லால் உயிரிழந்தார். அவருடன் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த பெண் காயமடைந்தார். கேரளாவில் வரும் 24-ஆம் தேதி வரை கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும், கள்ளக்கடல் நிகழ்வு காரணமாக கடலோர மாவட்டங்களில் உயரமான அலைகள் எழும் என்றும், கடல் அரிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.