BREAKING

BREAKING || தலை, கை, முதுகெலும்பு, கால் - தனித்தனியாக கிடந்த உடல்...பதற்றத்தில் கோத்தகிரி

தற்றத்தில் கோத்தகிரி

thanthitv

#Kotagiri | #Cheetah BREAKING || நேற்று தலை, கை... இன்று முதுகெலும்பு, கால் - தனித்தனியாக கிடந்த உடல்... பதற்றத்தில் கோத்தகிரி கோத்தகிரி அருகே தேயிலை தோட்டத்திற்குள் இறந்த பழங்குடி வெள்ளிங்கிரி உடல் பாகங்கள் தேடும் பணி தீவிரம் பாகங்கள் கிடந்த பகுதியில் சிறுத்தையின் கால் தடம் பதிவாகியுள்ள நிலையில் சிறுத்தை தாக்கி உள்ளதா என வனத்துறையினர் விசாரணை இன்று முதுகெலும்பு மற்றும் கால் எலும்பு மீட்கப்பட்ட நிலையில் தானியங்கி கேமரா வைத்து கண்காணிக்கும் பணி மற்றும் உடல் பாகங்களை தேடும் பணியில் வனத்துறை தீவிரம் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கூவக்கரை பழங்குடியை சேர்ந்தவர் வெள்ளிங்கிரி (50). இவர் அரவேனு பகுதியை அடுத்துள்ள தோட்டத்துவீட்டில் தங்கி வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த 29 ஆம் தேதி அன்று இவர் காணமல் போனதாக காவல்துறையில் குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர். நேற்று மாலை அவர் வேலை செய்து வந்த தோட்டத்தின் அருகில் அவரின் ஆடை மற்றும் காலணிகள் கிடந்துள்ளன. உடனே காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து அருகே உள்ள காட்டுப்பகுதியில் தேடியுள்ளனர். அப்போது அவரின் தலை, கை என உடலின் பாகங்கள் தனித்தனியாக கிடந்துள்ளது. அதனை மீட்டுள்ளனர். மேலும் உடலின் பாகங்களை தேடி வருகின்றனர். இந்த நிலையில் இரண்டாதுஇரண்டாவது நாளாக வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து அந்தப் பகுதியில் தீவிரமாக தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர் இன்று வெள்ளிங்கிரியின் கால் எலும்பு மற்றும் முதுகெலும்பு தேயிலை தோட்டத்திற்குள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த பகுதியில் சிறுத்தையின் கால் தடங்களும் அதன் எச்சங்களும் கண்டறியப்பட்டுள்ளதால் 3 தானியங்கி கேமராக்கள் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டுள்ளது. மேலும் உடல் பாகங்கள் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது."

BREAKING || நில மோசடி வழக்கு - முன்னாள் துணை ஆட்சியர் வீடு, நிலம், நகைகள் பறிமுதல்

#BREAKING || TN Govt | தனியார் பள்ளியில் RSS முகாம் - தமிழக அரசுக்கு பறந்த உத்தரவு

Gold Price Update | ஒரே நாளில் இன்னொரு ரவுண்டு வந்த தங்கம் விலை - ``என்ன இப்படி ஆகிடுச்சி?’’

DMDK Premalatha | BJP | EPS | ``கூட்டணியில் தேமுதிக?’’ - NDA தரப்பில் பரபரப்பு தகவல்

Annamalai | BJP | விலகிய அண்ணாமலை.. மறுநொடியே பாஜக தலைமை எடுத்த முடிவு