#tngovt | #DSP BREAKING || தமிழகம் முழுவதும் அதிரடி மாற்றம்...
ஆக்ஷனில் இறங்கிய அரசு தமிழகம் முழுவதும் 46 டிஎஸ்பிக்கள் பணியிட மாற்றம் காவல்துறை தலைமை இயக்குநர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவு தமிழகம் முழுவதும் பணியாற்றி வரும் 46 காவல் உதவி ஆணையர்கள் மற்றும் துணைக் காவல் கண்காணிப்பாளர்களை பணியிட மாற்றம் செய்து தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவு பிறப்பித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சப்-டிவிஷன் டிஎஸ்பியாக பணியாற்றிய ஜெகநாதன், காத்திருப்போர் பட்டியலில் இருந்த நிலையில், மதுரை திருப்பரங்குன்றம் உதவி ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார் பாளையங்கோட்டை உதவி ஆணையராக பணியமர்த்தப்பட்ட சரோஜா, திருநெல்வேலி மத்திய குற்றப்பிரிவு டிஎஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார். ஆவடி காவல் ஆணையரக குற்ற ஆவணக் காப்பகத்தில் உதவி ஆணையராக பணியாற்றிய முத்துராஜா, லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். எஸ்.பி.சி.ஐ.டி. டிஎஸ்பியாக பணியாற்றிய சரஸ்வதி, சென்னை பெருநகர காவல் ஆணையரக உதவி ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதிதீவிர குற்றத்தடுப்பு பிரிவு உதவி ஆணையராக பணியாற்றிய தமிழ்வாணன், பொன்னேரி காவல் உதவி ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.