Breaking | Keralam | Sabarimalai | சபரிமலையில் குவியும் பக்தர்கள் | உச்சத்தை எட்டிய பிரசாதம் தட்டுப்பாடு
#keralam #sabarimalai #prasadam #thanthitv
சபரிமலையில் உச்சத்தை எட்டிய பிரசாதம் தட்டுப்பாடு 17 ஆயிரம் பக்தர்களுக்கு 5,000 டின் மட்டுமே கையிருப்பு சபரிமலையில் உச்சத்தை எட்டிய அரவணை தட்டுப்பாடு கையிருப்பில் 5 ஆயிரம் டின்கள் மட்டுமே... இன்று 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை! சபரிமலை ஐயப்பன் கோயிலில் கன்னி மாத பூஜைகள் நிறைவடைந்து இன்று கோயில் நடை அடைக்கப்பட உள்ள நிலையில், அரவணை தட்டுப்பாடு உச்சத்தை எட்டியுள்ளது. தற்போது தேவசம் போர்டு கையிருப்பில் சுமார் 5 ஆயிரம் டின் அரவணைகள் மட்டுமே உள்ளதாக கூறப்படுகிறது.இந்நிலையில், இன்று தரிசனத்திற்காக இணையவழியில் மட்டும் 15 ஆயிரம் பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர். நேரடி முன்பதிவுகளையும் சேர்த்தால், 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சபரிமலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.அரவணை தட்டுப்பாடு காரணமாக, ஒரு பக்தருக்கு ஒரு டின் அரவணை மட்டுமே வழங்கும் கட்டுப்பாடு கடந்த சில நாட்களுக்கு முன்பு அமல்படுத்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பக்தர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.அரவணை தயாரிக்கும் ஆலையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வந்ததால் உற்பத்தி நிறுத்தப்பட்டிருந்ததாக தேவசம் போர்டு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், மாதாந்திர பூஜையையொட்டி அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள் என்பது தெரிந்திருந்தும், அதற்கேற்ப அரவணையை முன்கூட்டியே கையிருப்பில் வைக்கத் தவறியதே தற்போதைய தட்டுப்பாட்டுக்கு காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது