BREAKING

CM Stalin | முதல்வர் ஸ்டாலின் போட்ட திடீர் ட்வீட்

CM Stalin | முதல்வர் ஸ்டாலின் போட்ட திடீர் ட்வீட்

thanthitv

இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதித் துறையில், குஜராத் மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களைப் பின்னுக்குத் தள்ளித் தமிழ்நாடு முதலிடத்தைப் பிடித்துள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். கடந்த நான்கு ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட நடவடிக்கைகளால், தமிழகத்தின் ஜவுளி ஏற்றுமதி இருபத்தி ஒன்பது விழுக்காடு வளர்ச்சியை எட்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த 2020-21 நிதியாண்டில் 6,193 மில்லியன் டாலராக இருந்த ஏற்றுமதி மதிப்பு, தற்போது 7,997 மில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இந்தியாவின் ஒட்டுமொத்த ஜவுளி ஏற்றுமதியில் தமிழகம் மட்டுமே 21.84 விழுக்காடு பங்களிப்பை வழங்கி வருவதாக மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை