திரைப்பட விமர்சனம்

மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல...! மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை ரசிகர்கள் கொண்டாட காரணம் என்ன ? அப்படி என்ன இருக்கிறது மஞ்சும்மல் பாய்ஸ் படத்தில்..?

தந்தி டிவி

மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல...!

மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை ரசிகர்கள் கொண்டாட காரணம் என்ன ?

அப்படி என்ன இருக்கிறது மஞ்சும்மல் பாய்ஸ் படத்தில்..?

ஃபீல் குட் மூவிஸ் மூலம் தமிழ்த்திரையுலக ரசிகர்களை கொண்டாட்ட மனநிலைக்கு கொண்டு செல்வதில் மலையாள படங்கள் தவறியதில்லை..

ப்ரேமம் தொடங்கி ஹ்ரிதயம் வரை பல படங்கள் தமிழ் ரசிகர்களின் ஆல் டைம் ஃபேவரைட்டாகவே உள்ளது.

இந்நிலையில் இந்த லிஸ்டில் யாரும் எதிர்ப்பார்த்திராத வகையில் இணைந்துள்ளது இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் பிப்ரவரி 22ம் தேதி வெளியான மஞ்சும்மல் பாய்ஸ்...

வாட்ஸப், இன்ஸ்டா, ஃபேஸ்புக் என எந்த பக்கம் போனாலும் குணா படத்தின் கண்மணி அன்போடு காதலன் பாடல் ஒலிக்க, காரணம் இந்த எளிமை காவியம் தான்..

அப்படி என்ன தான் இருக்கிறது இந்த மஞ்சும்மல் பாய்ஸ் படத்தில்? என படம் பார்க்காதவர்கள் புருவம் உயர்த்தி வர..படம் பார்த்தவர்கள் எல்லாம் ஆஹா ஓஹோ என புகழ் பாடி வருகின்றனர்.

காரணம் தமிழ் திரையுலகினருடன் படத்தில் உள்ள கனெக்ட்.

நண்பர்கள் கூட்டத்துடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்த இளைஞர் கூட்டத்தின் கதையில், குணா படத்தின் ரெஃபரன்ஸ் படத்தை நம் மனதில் பதிய வைத்திருக்கிறது.

அதிலும் க்ளைமேக்ஸில் மொத்த திரையரங்கத்தையும் கண்ணீர் கடலில் ஆழ்த்தி விட்டது கண்மணி அன்போடு பாடல்..

மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக்காதல் அல்ல..என குணா படத்தில் காதல் புனிதத்தை உணர்த்திய பாடல் வரிகள்.. இப்படத்தில் நட்பின் புனிதத்தை உணர்த்தியுள்ளது..

கிளைமேக்ஸ் எமோஷனில் இருந்து மீளாத ரசிகர்களுக்கு, மஞ்சும்மல் பாய்ஸ் படம், 2006ல் நிகழ்ந்த நிஜக்கதையை தழுவி எடுத்தது என்பது மேலும் எமோஷனலாக கனெக்ட் ஆகிவிட்டது...

இதனால் படத்துடன் நிஜ வாழ்க்கை நண்பர்களையும் புகழ்ந்து தள்ளி வருகின்றனர்..

இதையும் தாண்டி படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்க்க முக்கிய காரணம், படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கு தரப்பட்ட முக்கியத்துவம் தான்..

அதிலும் தனிக்கவனம் பெற்றது குட்டன் கதாபாத்திரம்..

குட்டனாக நடித்த ஷௌபின் ஷாஹிர், மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரும் ஆவார்.

எந்தவித கதாபாத்திரமாக இருந்தாலும் இறங்கி கலக்கும் இவர், பல படங்களில் நடித்தாலும் அங்கீகாரம் பெறாமல் இருந்த நிலையில் இப்போது ஷௌபினுக்கு, மஞ்சும்மல் பாய்ஸ் படம் புது அடையாளத்தை தந்திருக்கிறது...

இப்படி ரசிகர்களுக்கு விருந்தளித்து, அனைத்து புகழுக்கும் சொந்தக்காரரான இயக்குநர் சிதம்பரம்...மஞ்சும்மல் பாய்ஸ் இந்த அளவிற்கு ஹிட் அடிக்கும் என நினைத்து கூட பார்க்கவில்லை என வியக்கிறார்.

அறிமுக இயக்குநரான சிதம்பரம், கமல்ஹாசனின் தீவிர ரசிகன் என அவரே தன்னை அடையாளப்படுத்தி கொள்ளும் நிலையில், இது ஒரு ஃபேன் பாய் சம்பவம் என்றே கூறலாம்..

அதே வேளையில் படத்தின் தயாரிப்பு பார்த்து வாய்ப்பிளக்கும் பலர் இதனை ஹை பட்ஜெட் படம் என கணிக்கும் நிலையில், வெறும் 5 கோடியில் மட்டுமே படம் உருவானதாக பூரிப்புடன் தெரிவிக்கின்றனர் படக்குழுவினர்.

எந்த மிகைப்படுத்துதலும் இல்லாமல்...எளிமையான முறையில் படமாக்கப்பட்டுள்ளதால்..டப்பிங், சப் டைட்டில் இல்லை என்றாலும் ஒரிஜினல் வெர்ஷனை கொண்டாடுகின்றனர் தமிழ் ரசிகர்கள்..

தேடித் தேடி திரைப்படங்களை கொண்டாடும் தமிழ் ரசிகர்கள் மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை கொண்டாடி வருவதற்கு தமிழகத்தில் அரங்கு நிறைந்த காட்சிகளே சாட்சியாகி இருக்கிறது...

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்