தற்போதைய செய்திகள்

"Fraud No.1.." மொத்த காவல்துறைக்கே அல்வா தந்த தனி ஒருவன்..பிரதமர் அதிகாரி என Z+ பாதுகாப்பு, புல்லட் ப்ரூப் கார்... ராஜ வாழ்க்கை... நாட்டையே கிறுகிறுக்க வைத்துள்ள மோசடி

தந்தி டிவி

குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் கிரண் பட்டேல். இவர் பிரதமர் அலுவலகத்தின் யுக்திகள் மற்றும் பிரச்சார குழுவின் கூடுதல் இயக்குனர் என கூறி காவல்துறையை தொடர்பு கொண்டுள்ளார். இதில், கிரண் பட்டேலுக்கு Z+ பாதுகாப்பும், குண்டுகள் துளைக்காத புல்லட் ப்ரூஃப் மற்றும் எஸ் வி யூ வாகனமும் காவல்துறை வழங்கிய நிலையில், கிரேண் பட்டேல் செல்லும் இடத்திற்கெல்லாம் நட்சத்திர விடுதியும் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளது. இந்த விவகாரத்தில் காவல்துறையினருடன் சேர்ந்து பல விவகாரங்கள் குறித்து ஆய்வு செய்வது போல் கிரண் பட்டேல் கூட்டமும் நடத்திய நிலையில், ஒரு கட்டத்தில் கிரண் பட்டேல் மோசடி பேர்வழி என்பது போலீசாருக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து, பத்து நாள்களுக்கு முன்பே கிரண் பட்டேலை போலீசார் கைது செய்த நிலையில், இந்த விவகாரத்தை காவல்துறை மூடி மறைத்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில், கிரண் பட்டேலை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது, நீதிமன்ற காவலில் விசாரிக்கையில் அனைத்தும் வெளிச்சத்திற்கு வந்ததாக கூறப்படுகிறது.

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு

CM Vijay | TN Crop Loan Waiver | 100% பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு