தற்போதைய செய்திகள்

மதுபானக் கடை பாரில் இளைஞர் சரமாரியாக வெட்டிக் கொலை - திருச்சி சமயபுரத்தில் பரபரப்பு

தந்தி டிவி

சமயபுரத்தை அடுத்த சேனியர் கள்ளிக்குடி கிராமத்தை சேர்ந்த மாரியப்பன் மகன் பாபு, சமயபுரம் கோவில் அருகே உள்ள கடை ஒன்றில் மாலை கட்டும் வேலை பார்த்து வந்தார். சமயபுரம் நால்ரோடு அருகே உள்ள மதுபானக் கடை பாரில், பாபு மது அருந்திக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல், அவரை சரமாரியாக வெட்டினர். இதில், பலத்த காயமடைந்து ரத்தம் வெள்ளத்தில் சரிந்து விழுந்த அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து சமயபுரம் போலீசார், கொலை நடந்த இடத்தை பார்வையிட்டு, கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்