தற்போதைய செய்திகள்

CSK அணியில் இடம்கேட்ட யோகி பாபு - எச்சரிக்கையோடு பதிலளித்த தோனி

தந்தி டிவி

சிஎஸ்கே அணியில் சேர விரும்புவதாக நடிகர் யோகி பாபு கூறியதும், அதற்கு தோனி கூறிய பதிலும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. தோனியின் மனைவி சாக்‌ஷி தயாரித்துள்ள எல்ஜிஎம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய யோகி பாபு, தோனியை பார்த்து சிஎஸ்கே அணியில் சேர விரும்புவதாக கலகலப்பாக பேசினார். அதற்கு பதிலளித்த தோனி, அம்பாத்தி ராயுடு ஓய்வு பெற்றுவிட்டதால், அந்த இடம் காலியாக இருக்கிறது என்றும், அணி நிர்வாகத்திடம் பேசுவதாகவும் கூறினார். ஆனால், அதற்கு முன்பாக எல்ஜிஎம் படத்திற்கு கால்சீட் கொடுக்குமாறு யோகி பாபுவிடம் கேட்ட தோனி, காயம் ஏற்படுத்தும் அளவுக்கு வேகமாக பந்து வீசுவார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள் என்று கலகலப்பாக பதிலளித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்