தற்போதைய செய்திகள்

"ஆமா நான் ஆபாச நடிகை தான்.. வெளிப்படையா செஞ்சேன்.. ஆனா நீங்க.." - ரோஜாவை பதம் பார்த்த சன்னி லியோன்

தந்தி டிவி

சன்னி லியோன் குறித்து ஆந்திர மாநில அமைச்சரும் நடிகையுமான ரோஜா தரக்குறைவாக பேசியதற்கு பதிலடி கொடுத்துள்ளார் சன்னி லியோன். இது குறித்து அலசுகிறது இந்த தொகுப்பு.

ஆபாச பட உலகில் கொடிகட்டிப் பறந்து, இளைஞர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்த நடிகை சன்னி லியோன், இப்போது பாலிவுட் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

திருமணம் செய்து கொண்ட சன்னி லியோன், குழந்தைகளை தத்தெடுத்து வளர்ப்பது உள்பட பல்வேறு சமூக சேவைகளில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார்.

இந்நிலையில், சன்னி லியோனை வம்புக்கு இழுத்து மாட்டிக் கொண்டு சிக்கலில் சிக்கியுள்ளார் நடிகை ரோஜா.

தெலுங்கு திரையுலகின்முன்னணி நடிகரும், ஜனசேனா கட்சி தலைவருமான நடிகர் பவன் கல்யான், தனது வராஹி யாத்திரை நடைபயணத்தின் போது, அம்மாநில முதல்வர் ஜகன் மோகன் ரெட்டியை கடுமையாக விமர்சித்து பேசினார்.

இதற்கு பதிலடி தரும் விதமாக பேசிய நடிகையும் ஆந்திர சுற்றுலாத்துறை அமைச்சருமான ரோஜா " பவன் கல்யாண் எல்லாம் ஜெகன் மோகனுக்கு பாடம் எடுக்கிறார். இது,

சன்னி லியோன் வேதம் ஓதுவது போல உள்ளது" என்று கொச்சையாக பேசினார்.

ரோஜா பேசிய இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைராலானது. ரோஜாவின் பேச்சை கடுமையாக கண்டித்த பவன் கல்யாண் ஆதரவாளர்கள், சமூக வலைதளங்களில் ரோஜாவை திட்டி தீர்த்தனர்.

இந்நிலையில், இந்த விஷயத்தில் மவுனம் காத்து வந்த நடிகை சன்னி லியோன், ரோஜாவுக்கு எதிராக ட்விட்டரில் கொந்தளித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "எனது கடந்த காலத்தை நினைத்து நான் ஒருபோதும் வருந்தியதில்லை. ஆனால், உங்களை போல நான் இல்லை.

நான் என்ன செய்ய வேண்டுமோ அதை வெளிப்படை யாகவே செய்வேன். உங்களுக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம் இது தான்,..

நான் ஆபாச உலகத்தை விட்டுவிட்டேன்.. ஆனால் நீங்கள் அதை இன்னும் செய்யவில்லை." என்று ரோஜாவை விமர்சித்துள்ளார். 

இந்நிலையில், நடிகை சன்னி லியோனுக்கு ஆதரவாக பவன் கல்யாணின் ரசிகர்கள் களமிறங்கி உள்ளதால் ஆந்திர அரசியல் களம் சூடுபிடித்துள்ளது

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு