தற்போதைய செய்திகள்

வாயை விட்ட எடியூரப்பா... உச்சக்கட்ட டென்ஷனில் பாஜகவினர்

தந்தி டிவி
• கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில், தமது மகன் ஷிகாரிபுராவில் போட்டியிடுவார் என, முன்னாள் முதல்வர் எடியூரப்பா வெளிப்படையாக தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. • பாஜகவின் மூத்த தலைவர்களுள் ஒருவரான சி.டி ரவி, தேர்தலில் யாருக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பது, எடியூரப்பா வீட்டு சமையலறையில் முடிவாகாது என்றும், கட்சித் தலைமையே முடிவு செய்யும் என கருத்து தெரிவித்திருந்தார். • இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த எடியுரப்பா, தனது மகன் விஜயேந்திரா ஷிகாரிபுரா தொகுதியில் தான் போட்டியிடுவார் என, எடியூரப்பா தெரிவித்துள்ளார். • இன்னும் நான்கு ஐந்து நாட்களில் பாஜகவின் வேட்பாளர் பட்டியல் வெளியாக உள்ள நிலையில் ஷிகாரி புராவில், எடியூரப்பா மகன் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. • வேட்பாளர் பட்டியல் வெளியாகும் முன், எடியூரப்பா உறுதி பட தமது மகன் போட்டியிடும் தொகுதி பற்றி கூறியுள்ளது பாஜகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்