தற்போதைய செய்திகள்

மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார்.. பாஜக எம்பி-க்கு எதிராக டெல்லி போலீஸ் அதிரடி

தந்தி டிவி

மல்யுத்த வீராங்கனைகள் மீதான பாலியல் புகாரில், மல்யுத்த சம்மேள தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷணுக்கு எதிராக டெல்லி காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக அளிக்கப்பட்ட புகாரின் மீது வழக்குப்பதிவு செய்துள்ள டெல்லி காவல்துறை, சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தது. இது தொடர்பான வழக்கு, புதுடெல்லி தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பிரிஜ் பூஷணுக்கு எதிராக குற்றப்பத்திரிகையை டெல்லி காவல்துறை தாக்கல் செய்துள்ளது. இதற்கிடையே, சிறுமி அளித்த புகாரில் அடிப்படையில் பிரிஜ்பூஷண் மீது பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கை ரத்து செய்யக்கோரி, டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் டெல்லி போலீசார் மனுதாக்கல் செய்துள்ளனர். அதில், சிறுமி மற்றும் அவரது தந்தை அளித்த புகாரில் முரண்பாடுகள் இருப்பதாகவும், போக்சோ வழக்கில் உறுதிப்படுத்தும் சான்றுகள் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை அடுத்த மாதம் 4ம் தேதி விசார​ணைக்கு வருகிறது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்